.webp)
Colombo (News 1st) முல்லைத்தீவு - மல்லாவி, வடகாடு வயற்பகுதியில் இருந்து சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
காலையில் வயலுக்கு சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொல்லவிளாங்குளம் - வவுனிக்குளம் பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.