மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைக்க தீர்மானம்

இலங்கை - இந்திய மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைக்க தீர்மானம்

by Staff Writer 07-06-2023 | 8:54 AM

Colombo (News 1st) 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை - இந்திய மின் விநியோக கட்டமைப்பை ஒன்றிணைப்பதற்கு முன்னுரிமையளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் வணிகக் கட்டமைப்பை தயாரிப்பதற்கு உலக வங்கியினால் இலங்கை மின்சார சபைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த திட்டம் தொடர்பில் உலக வங்கியின் பிராந்திய வலையமைப்புத் திட்டத்தின் பணிப்பாளர் பெசில் ப்ரூமன் மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ கென்டா ஆகியோர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று(06) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.