.webp)
INDIA: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 7.20 மணியளவில் 3 ரயில்கள் மோதி விபத்திற்குள்ளாகின.
இந்த கோர விபத்தில் 17 பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூர் - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்திற்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும்.
மீட்புப் பணிகள் ஓரளவிற்கு முடிவுற்றுள்ள நிலையில், ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், கீழே சிக்கியிருக்கும் ரயில் பெட்டிகளை கிரேன்கள் மற்றும் புல்டோசர்களின் உதவியோடு மேலே எடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், சிக்னலில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.