.webp)
Colombo (News 1st) நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒக்கமுரா (Kenji Okamura) தெரிவித்துள்ளார்.
நேற்று(31) பாராளுமன்றத்திற்கு சென்றிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கை சாதகமான அணுகுமுறையை கையாண்டுள்ளதாக தெரிவித்த ஒக்கமுரா, அதற்காக இலங்கை செய்துள்ள தியாகங்களை பாராட்டியுள்ளார்.
இவ்வாறான சாதகமான அணுகுமுறைகளின் மூலம் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என தான் நம்புவதாக கென்ஜி ஒக்கமுரா கூறியுள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தமது பாராட்டுகளையும் இதன்போது தெரிவித்துள்ளார்.