.webp)
Colombo (News 1st) 2000இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலைமையை சீர்செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.