.webp)
Colombo (News 1st) 2021 - 2023 காலப்பகுதிக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
9 அணிகள் பங்கறே்ற இந்த தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி, இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், இம்முறை கிண்ணத்தை வெற்றிகொள்ளும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
இரண்டாமிடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது.
தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ள தென்னாபிரிக்க அணிக்கு 4,50,000 டொலர்களும், நான்காம் இடத்தில் உள்ள இங்கிலாந்திற்கு 3,50,000 டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள இலங்கை அணிக்கு 2 இலட்சம் டொலர்கள் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு தலா ஒரு இலட்சம் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.