.webp)
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று (26) நடைபெற்றது.
அரசியல் தீர்வு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான நேற்றைய சந்திப்பில் கலந்துரையாடியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
நியாயமான அரசியல் தீர்விற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள மக்கள் இன ரீதியாக பிரிக்கப்படாமல் ஒற்றுமையாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்துவது தமது கடமை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருடானான சந்திப்பின் போது சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.