.webp)
Colombo (News 1st) பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் புதிய செயலாளராக K.D.N.ரஞ்சித் அசோகவை நியமிப்பதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் இணைந்துகொண்டK.D.N.ரஞ்சித் அசோக, சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தராவார்.
இதற்கு முன்னர் அவர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.