.webp)
Saudi Arabia: சவுதி அரேபியாவில் யாத்திரிகர்களுடன் பயணித்த பஸ் விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று (27) மாலை யாத்திரிகர்கள் சிலர் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
இதன்போது, திடீரென பஸ் பிரேக் பிடிக்காததை அடுத்து, பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.
இதில், உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவிற்கு சென்று கொண்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.