கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு

by Bella Dalima 24-03-2023 | 6:53 PM

Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளைய தினம் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

நாளை (25) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.  

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக அம்பத்தலே நீர் விநியோக நிலையத்திற்கான மின் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.