தண்ணீருக்கான நெருக்கடி தொடர்பில் ஐ.நா. எச்சரிக்கை

தண்ணீருக்கான நெருக்கடி தொடர்பில் ஐ.நா. எச்சரிக்கை

by Staff Writer 22-03-2023 | 12:00 PM

Colombo (News 1st) உலகளாவிய தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான உடனடி அச்சுறுத்தல் தொடர்பில் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அளவுக்கதிகமான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீரை விரயமாக்குவதில் உலகம் அபாயகரமான பாதையில் கண்மூடித்தனமாகச் சென்று கொண்டிருப்பதாக அந்த அறிக்கை சாடியுள்ளது.

1977ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறவுள்ள முதலாவது ஐ.நா தண்ணீர் மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிக்கை வௌியாகியுள்ளது.