.webp)
Colombo (News 1st) கந்தப்பளை - சந்திரகாந்தி தோட்ட தேயிலை தொழிற்சாலை தீயினால் முழுமையாக சேதமடைந்துள்ளது.
கழிவுத் தேயிலையினை பொதி செய்ய பயன்படுத்தப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையே தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.30 அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், அரை மணித்தியாலத்திற்குள் தீ முழுமையாக பரவியதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்டபோது, அங்கு தொழிலாளர்கள் எவரும் இருக்கவில்லை எனவும் காவலாளிகள் இருவர் மாத்திரமே இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், இதுவரை தொழிற்சாலைக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், கந்தப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.