.webp)
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அவர் தனது வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த பூங்காவிற்குள் நாயை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுபடுத்தியுள்ளார்.
இதையடுத்து, நாய் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.