சாட்சி வழங்க சென்றவர் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

சாட்சி வழங்க சென்றவர் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

by Staff Writer 14-03-2023 | 2:39 PM

Colombo (News 1st) நீதிமன்றத்திற்கு சாட்சி வழங்க சென்ற ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் பதிவாகியுள்ளது.

இன்று (14) காலை நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகில் குறித்த நபர் மயங்கி வீழ்ந்ததாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்பளையில் இருந்து நீதிமன்றத்திற்கு சென்ற 62 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.