8 நாட்களில் 30,000 சுற்றுலா பயணிகள் வருகை

8 நாட்களில் 30,000 சுற்றுலா பயணிகள் வருகை

by Bella Dalima 11-03-2023 | 4:21 PM

Colombo (News 1st) மார்ச் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் சுமார் 25,000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை முதல் 08 நாட்களுக்குள் 30,000 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.6% அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா, இந்தியா மற்றும் ஜெர்மனில் இருந்தே அதிகளவானோர் நாட்டிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்,எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் சீனாவிற்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.