.webp)
Colombo (News 1st) சிறுபோக செய்கையை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது 67.5% நீர் காணப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரண குறிப்பிட்டார்.
பெரும்போகத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட 8 இலட்சம் ஏக்கர் வயலில் 80 வீதமானவற்றில் இம்முறை சிறுபோக செய்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
மட்டக்களப்பு, மன்னார், புத்தளம், மொனராகலை போன்ற மாவட்டங்களில் சிறுபோக செய்கையை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை விவசாயிகள் முன்னெடுத்துள்ளதாகவும் சுதர்ஷனி விதானபத்திரண தெரிவித்தார்.
இந்த நிலையில், மழைநீரை அதிகளவு பயன்படுத்துவதனூடாக நீர் முகாமைத்துவத்தை சீராக பேண முடியுமென நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சுதர்ஷனி விதானபத்திரண சுட்டிக்காட்டினார்.