.webp)
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - இளவாலை, பனிப்புலம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் தொடர்பில் கனேடிய பிரஜை உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவில் இருந்து பணம் அனுப்பி இந்த தாக்குதலை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கனேடிய பிரஜை கடந்த 23 ஆம் திகதி 2 இலட்சம் ரூபா பணத்தை அனுப்பியுள்ளதுடன், 24 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பின்னர் கடந்த 25 ஆம் திகதி குறித்த கனேடிய பிரஜை (50) நாட்டிற்கு வந்துள்ளார். இதன்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் 23, 27 , 34 வயதான இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து வாள், கத்தி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அவர்களை யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தேவநாயகம் மேனன் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.