பெண்கள் தினத்தில் ஜனாதிபதி வாழ்த்து

அரச, தனியார் துறைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 08-03-2023 | 7:22 PM

Colombo (News 1st) முகாமைத்துவத்திலும் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறிமுறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி அரச, தனியார் துறைகளிலும் பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிப்பதற்கான விரிவான வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

நாடு பொருளாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ள போதிலும், பெண்களுக்கான கௌரவம் , அவர்களின் சக்தியினை வௌிப்படுத்தும் வகையில், 'அவளே நாட்டின் பெருமை' என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச மகளிர் தினம் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.