மார்ச் 9 முதல் 15 வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

மார்ச் 9 முதல் 15 வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கை: தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானம்

by Bella Dalima 07-03-2023 | 5:57 PM

Colombo (News 1st) அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.