மருதானை வீதிகளில் பேரணிக்கு தடை

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளில் பேரணிக்கு தடை

by Staff Writer 07-03-2023 | 2:47 PM

Colombo (News 1st) மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளில் பேரணி நடத்த நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு, காலி முகத்திடல் பகுதிகளுக்குள் பிரவேசிக்க வசந்த முதலிகே உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.