சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை - லிட்ரோ

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை - லிட்ரோ நிறுவனம்

by Staff Writer 05-03-2023 | 2:17 PM

Colombo (News 1st) சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச்சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் 05 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

விலைச் சூத்திரத்திற்கிணங்க, எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதை கருத்திற்கெண்டு, விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

அதற்கமைய, தற்போது காணப்படும் விலையிலேயே இந்த மாதத்திலும் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படவுள்ளது.