நாட்டை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

by Staff Writer 05-03-2023 | 2:46 PM

Colombo (News 1st) உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகரிலிருந்து துபாய் நோக்கி பயணிக்கும் குறித்த EK 449 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 62,800 லீட்டர் எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 68 இலட்சம் ரூபாவாகும்.

ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.