இந்திய ரூபா இலங்கையில் பயன்படுத்தப்படவுள்ளதா?

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

by Staff Writer 05-03-2023 | 10:09 PM

Colombo (News 1st) இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணய அலகாக மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்திய பிரஜைகள் அவர்களது பணத்தை நேரடியாக இலங்கையில் பயன்படுத்த முடியும் என்பதுடன் இலங்கையர்கள் வேறு நாணயங்கள் மீது தங்கியிருக்காமல் செயற்பட முடியும் என அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு நடவடிக்கையும் இலங்கையில் இடம்பெற அனுமதிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.