அனாவின் பொருட்கள் திருட்டு: சந்தேகநபர்களுக்கு பிணை

அனா புஞ்சிஹேவாவின் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு: சந்தேகநபர்களுக்கு பிணை

by Staff Writer 05-03-2023 | 2:36 PM

Colombo (News 1st) முன்னாள் கிரிக்கெட் தலைவர் அனா புஞ்சிஹேவாவின் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், புதுக்கடை இலக்கம் 02  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனா புஞ்சிஹேவாவின் 467,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் மற்றும் 2 இலட்சம் ரூபா பணம் ஆகியன சந்தேகநபர்களால் திருடப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புஞ்சிஹேவாவின் கைகளில் கைவிலங்கு இட்டு இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் களஞ்சியப் பிரிவில் பணிபுரிந்த 21 வயதான தொழிலாளர்கள் ஆவர்.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு 15 ஐ சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.