.webp)
Colombo (News 1st) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருடம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையறையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சிலரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (16) மாலை 4 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் தங்களின் விடுதிகளிலிருந்து வௌியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டதாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க குறிப்பிட்டார்.