.webp)
Colombo (News 1st) நாக்பூரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, ICC-யின் சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது.
இதன் மூலம் T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே முதலிடத்தில் இருக்கும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்தது.
இந்தியா தற்போது 115 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவும் (111) இங்கிலாந்தும் (106) உள்ளன.
இன்று வெளியிடப்பட்ட ICC டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்த பிறகு, இந்திய அணி மூன்று வடிவங்களிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒரே நேரத்தில் அனைத்து வடிவங்களிலும் இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை.
இவை அனைத்தும் ரோகித் சர்மாவின் தலைமைத்துவத்தின் போது நடந்துள்ளது.
கடந்த மாதம் நியூசிலாந்தை சொந்த மண்ணில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.