பெரும்போக நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலை

பெரும்போக நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலை அறிவிப்பு

by Staff Writer 14-02-2023 | 11:13 AM

Colombo (News 1st) பெரும்போக நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை நிதி அமைச்சினூடாக வௌியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசேகர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோ கிராம் 88 ரூபாவிற்கும் உலர்த்தப்பட்ட நெல் ஒரு கிலோ கிராம் 100 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் மத்திய ஆலை உரிமையாளர்களூடாக நெல்லை கொள்வனவு செய்யுமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் கூறினார்.

இதேவேளை, நெல் கொள்வனவு தொடர்பான செயற்றிட்டம் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(14) அழைப்பு விடுத்துள்ளார்.

நெல் கொள்வனவுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை, அக்குரேகொட இராணுவ தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பெரும்போக நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலை அறிவிப்பு