Facebook களியாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது

Facebook ஊடாக ஒழுங்குசெய்யப்பட்ட களியாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது

by Staff Writer 13-02-2023 | 2:32 PM

Colombo (News 1st) Facebook ஊடாக ஒழுங்குசெய்யப்பட்டு பியகம - பண்டாரவத்த பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் களியாட்டத்தில் ஈடுபட்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப்பொருள் மற்றும் போதைவில்லைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, மருதானை, கிரேண்ட்பாஸ், பேலியகொடை மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.