வெல்லவாய நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை நாளை

வெல்லவாய நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை நாளை(13)

by Staff Writer 12-02-2023 | 2:45 PM

Colombo (News 1st) வெல்லவாய பிரதேசத்தில் பதிவாகியுள்ள சிறு நில அதிர்வுகள் தொடர்பான கள ஆய்வுகள் இன்று(12)  இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றன.

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வெல்லவாய, புத்தல உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும்(11) நேற்று முன்தினமும்(10) மூன்று நில அதிர்வுகள் பதிவாகின.

இது குறித்த ஆய்வுப் பணிகள் இன்று(12) நிறைவடையவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர் நில்மினி தல்தேன தெரிவித்தார்.

இதற்கு இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை நாளை(13) வெளியிடப்படும் என நில்மினி தல்தென தெரிவித்தார்.