.webp)
Colombo (News 1st) வெல்லவாய நகரை அண்மித்து இன்று மீண்டும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
இன்று (11) அதிகாலை 3.48 மணிக்கு 2.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும், இதனால் அபாய நிலைமை இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றும் வெல்லவாய மற்றும் புத்தலையில் 3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானது.
இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகத்தின் அதிகாரிகள் இன்று புத்தலைக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.