.webp)
Colombo (News 1st) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் இன்று காலமானார்.
கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.
விபத்தில் காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த யாழ். மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.