.webp)
Colombo (News 1st) கட்டுகஸ்தோட்டை - நவயாலதென்ன, ஜம்புகஹப்பிட்டிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
பாதசாரிகள் இருவர் மீது வேன் மோதியதில் 14 வயது மகளும் 47 வயதான தந்தையுமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.