வசந்த முதலிகேவிற்கு பிணை

வசந்த முதலிகேவிற்கு பிணை

by Staff Writer 01-02-2023 | 12:51 PM

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட 03 வழக்குகளிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்குகள் இன்று(01) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டதாக சட்டத்தரணி நுவான் போப்பகே தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே, அந்த வழக்கிலிருந்து நேற்று(01) விடுவிக்கப்பட்டார்.