சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

P.M.S.சார்ள்ஸின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதியால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை - ஜனாதிபதி செயலகம்

by Staff Writer 29-01-2023 | 6:44 PM

Colombo (News 1st) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக P.M.S.சார்ள்ஸ் அனுப்பிய கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு இதனை உறுதிப்படுத்தினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக P.M.S.சார்ள்ஸ் கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதமொன்றினூடாக தெரியப்படுத்தியதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக எந்தவொரு உறுப்பினரும் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார். 

P.M.S.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வௌியான தகவல்கள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.