.webp)
பிரபல கிரிக்கெட் வீரர் K.L.ராகுல், நடிகை அதியா ஷெட்டி திருமணம் நேற்று (23) மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
மும்பையிலிருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் கண்டாலா பகுதியில் உள்ள அதியாவின் தந்தை சுனீல் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், அதியா - K.L. ராகுல் திருமண வைபவம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் தம்பதி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி, 2015 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 4 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் ஞாயிறன்று மெஹந்தி விழா நடைபெற்றது. திங்கள் அன்று, மலை வாசஸ்தலமான கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது.
2023 IPL போட்டிக்கு பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திர தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.