.webp)
Colombo (News 1st) ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஆனந்த பாலித்த மற்றும் மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்ஜீவ ஆகியோர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் திலிக கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனந்த பாலித்த மற்றும் தம்மிக்க சஞ்ஜீவ ஆகிய இருவரும் நேற்றிரவு கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
குறித்த தொலைபேசி உரையாடல்கள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.