காலிமுக்திடலுக்கு சென்ற ஹிருணிக்கா உள்ளிட்ட சிலர்

சுதந்திர தின விழா முன்னாயத்தங்கள் தொடர்பில் ஆராய ஹிருணிக்கா உள்ளிட்ட சிலர் காலிமுக்திடலுக்கு சென்றனர்

by Staff Writer 23-01-2023 | 2:16 PM

Colombo (News 1st) 200 மில்லியன் ரூபா செலவில் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தின விழாவின் முன்னாயத்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் இன்று(23) காலிமுக்திடலுக்கு சென்றிருந்தனர்.

ஐக்கிய பெண்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர் காலிமுகத்திடலுக்கு அருகில் முன்னெடுக்கப்படும் சுதந்திர தின விழாவிற்கான முன்னாயத்த நடவடிக்கைக்கு கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பை வௌியிட்டனர்.

இதனிடையே, எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்த பொலிஸார்,  எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.