.webp)
Colombo (News 1st) சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 04 கைதிகள் இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களுள் மரணதண்டனை கைதி ஒருவரும் அடங்குகின்றார்.
கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றும் குறித்த பரீட்சார்த்திகளுக்காக புதிய மெகசின் சிறைச்சாலையில் பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்தியாக இம்முறை பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள பரீட்சை மத்திய நிலையமொன்றில் குறித்த கைதி பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.