.webp)
Colombo (News 1st) 2023ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படையின் ஆசிய பசுபிக் கடற்படையால் நடத்தப்பட்ட CARAT 2023 இரு தரப்பு கடல் பயிற்சி நேற்று(21) முள்ளிகுளத்தில் ஆரம்பமானது.
இலங்கை கடற்படையின் கட்டளை அதிகாரி கெப்டன் சஞ்சீவ கொடிகார மற்றும் அமெரிக்காவின் நான்காவது கடற்படை படையணியின் இரண்டாம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கெப்டன் ஷான் மண்ட்ரயார் ஆகியோர் இதற்கு தலைமை தாங்கினர்.
மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்கான பயிற்சிகள் இடம்பெற்றன.
யுத்தம் இடம்பெறும் போது காயமடைவோருக்கு வசதிகளை வழங்குதல், மக்களை மீட்டல், காட்டுப் பகுதிகள் மற்றும் நகரங்களில் இராணுவத்தினரை பயன்படுத்தி மீட்புப் பணிகளை முன்னெடுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
வட மேல் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் நிஷாந்த பீரிஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.