ஆசிரியர் சேவையில் 8000 பேர் இணைக்கப்படவுள்ளனர்

டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

by Bella Dalima 21-01-2023 | 4:21 PM

Colombo (News 1st) கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த  8000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் இவர்கள் கடமையாற்றவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு முன்னதாக இவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.