கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் நுவரெலியாவில் விபத்து; 7 பேர் பலி, 57 பேர் காயம்

by Bella Dalima 20-01-2023 | 7:56 PM

Colombo (News 1st) கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு சென்ற பஸ் நுவரெலியா, நானுஓய -  ரதெல்ல பகுதியில் விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  57 பேர் காயமடைந்துள்ளனர். 

வேன் ஒன்றுடன் குறித்த பஸ் மோதியுள்ளதுடன் முச்சக்கரவண்டியொன்றும் விபத்திற்குள்ளானது.

விபத்திற்குள்ளான பஸ் பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. 

வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் விபத்தில் பலியாகியுள்ளனர்.  

குறித்த வேன் டிக்கோயாவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.

ஹட்டன் - டிக்கோயாவை சேர்ந்தவர்களே வேனில் பயணித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த 7 பேரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மஹேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.

 காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.