பேலியகொடை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு

by Bella Dalima 17-01-2023 | 5:44 PM

Colombo (News 1st) பேலியகொடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற  துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 32 வயதான நபர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது மனைவியுடன் வீட்டிலிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

மல்லிகாராச்சிகே சஜித் ரங்க எனும் குறித்த நபர், 'மாபிம ரங்க' எனும் புனைபெயரால் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு 09 மில்லிமீட்டர் ரக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மார்புப் பகுதியில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர், பிணை அடிப்படையில் கடந்த 04 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து வௌியேறியுள்ளார். அவரிடம் 03 கொலைச்சம்பவங்கள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தததாக பொலிஸார் கூறினர்.