.webp)
Colombo (News 1st) பிலியந்தலை - ஹொரணை வீதியின் கும்புக்க பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று(15) நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபருக்கு கழுத்துப் பகுதியில் காயமேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த 36 வயதான நபர் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.