புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம்

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர்

by Chandrasekaram Chandravadani 15-01-2023 | 2:57 PM

Colombo (News 1st) புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்கும் நோக்கில் அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரில்புள்ளே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் டி இந்திரதிஸ்ஸ ஆகியோரின் இணை தலைமையுடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தேசிய பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.