.webp)
Colombo (News 1st) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக J. ஸ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் Duncan White கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட சம்மேளன தலைவருக்கான தெரிவில் 27 வாக்குகளை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் J.ஸ்ரீ ரங்கா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜகத் ரோஹன 24 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.
இந்த தேர்தலில் பங்கேற்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமார் வருகை தந்த போதிலும், அவரால் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.