அரசாங்கத்தின் கடினமான தீர்மானங்களின் அனுகூலங்களை மக்கள் உணர்வார்கள்: ஜனாதிபதி

by Staff Writer 14-01-2023 | 7:58 PM

Colombo (News 1st) அரசாங்கம் கடந்த வருடம் மேற்கொண்ட கடினமான தீர்மானங்களின் அனுகூலங்களை  எதிர்வரும் காலங்களில் மக்கள் உணரக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கொள்கைக் கட்டமைப்பிற்குள் செயற்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.