400 கிலோகிராம் கோதுமை மாவை திருடியவர் கைது

வத்தளையில் 400 கிலோகிராம் கோதுமை மாவை திருடியவர் கைது

by Bella Dalima 12-01-2023 | 3:50 PM

Colombo (News 1st) வத்தளை - மாபோலயில் அமைந்துள்ள களஞ்சியசாலை ஒன்றில் 400 கிலோகிராம் கோதுமை மாவை திருடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து வத்தளையை சேர்ந்த 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 1,12,000 ரூபா பெறுமதியான 50 கிலோகிராம் கோதுமை மா அடங்கிய 08 பொதிகளை திருடியுள்ளார்.

அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.