ஹம்பாந்தோட்டை மீனவர்களின் அமைதியின்மையை கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம்

by Staff Writer 09-01-2023 | 2:36 PM

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை கரையோரப் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை கடலில் இரு மீன்பிடி படகுகள் விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை கரையோரப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் இடையில் இன்று(09) காலை வாக்குவாதம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் வலுவடைந்ததை தொடர்ந்தே, கடற்படையினர் வான் நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.