சீனி வரி மோசடி தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 09-01-2023 | 9:20 PM

Colombo (News 1st) பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகாத காரணத்தினால், சீனி வரி மோசடி தொடர்பிலான அடிப்படை உரிமை மீறல் வழக்கை எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றம் இன்று(09) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனி இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட 12 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தாக்கல் செய்திருந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான L.T.B.தெஹிதெனிய மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கும் நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்டப்டது.

பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் தனிப்பட்ட அசௌகரியம் காரணமாக இன்று(09) மன்றில் ஆஜராகாத காரணத்தினால், மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணி ஒருவர் மன்றில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.