UNP உடன் இணைந்து செயற்பட இணக்கம் - SLPP

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட இணக்கம் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

by Staff Writer 09-01-2023 | 2:25 PM

Colombo (News 1st) எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் திருப்திகரமாக நிறைவடைந்ததாக கட்சியின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய இலங்கை சுதந்திரக் கட்சி இம்முறை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக, கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படுகின்ற பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் தமது கட்சியுடன் இருப்பதாக தலைவர் அவர் மேலும் கூறினார்.